முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு நிலம் தாரைவார்ப்பு: தமிழக கவர்னருக்கு சம்மன்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜூன். - 20 - தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு ஐதராபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர் ஆந்திர பிரதேச முதல்வராக இருந்த போது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு நிலத்தை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் முன்பு வரும் ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் அமீர்பேட் எனுமிடத்தில் அரசுக்கு சொந்தமான 9.14 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலம் ஐதராபாத் பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமானதாகும். 2010 ம் ஆண்டு டிசம்பரில் மோகன்லால் எனும் வழக்கறிஞர் ஏ.சி.பி. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு நிலத்தை தனியாருக்கு வழங்குவதற்கான அரசாணை பிறப்பித்ததில் அரசுக்கு ரூ. 200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஏ.சி.பி. அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணை அறிக்கையை 2011 மார்ச்சில் தாக்கல் செய்தனர். அதில் ரோசய்யாவுக்கு தொடர்பு உள்ளதாக எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் தாக்கல் செய்த எதிர்ப்பு மனு அடிப்படையில் சாட்சிகளை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. இதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.பி.எஸ்.கே. சர்மா(அப்போதைய முதன்மை செயலர்) டி.எஸ். அப்பாராவ்(நகராட்சி நிர்வாக அப்போதைய செயலர்), ஐதராபாத் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் அப்போதைய செயலர் ஆச்சார்யா ஆகியோரது வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago