முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாம் போட்டியிடாதது வருத்தம்: மம்தா பானர்ஜி

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன்.-  20 - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. எனினும் கலாம்தான் மக்களின் ஜனாதிபதி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் இணையதளத்தில் கூறியுள்ளதாவது, அப்துல் கலாம் நேர்மையானவர். இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. கலாமை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு சில அரசியல் கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ஊழல் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். சில தன்னலமிக்க அரசியல்வாதிகள், நீதிநெறி பிறழ்ந்து மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டனர். நாட்டை இருள் சூழ்ந்துள்ளது. பணம், அதிகாரம், ஊழல் மூலம் பொதுநலம், வாழ்வியல் மதிப்பீடுகள் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன. எனினும் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்திய அரசியலை தூய்மைப்படுத்தி நேர்மை, நீதிநெறிகளை மீட்டெடுப்பார்கள். நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் மம்தா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்