முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் ரூ. 5. 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், மே.20.  விருதுநகர் மாவட்ட கலெக்டர்; அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்;; மு.பாலாஜி; தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்; முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள், தனிநபர் வழங்கிய மனுக்கள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு,  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பேசும்போது தெரிவித்ததாவது : முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மனுக்கள் நிலுவை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும், ஒரு வார காலத்திற்குள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதே போன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக உரிய நபர்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்படுகின்ற மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாட்களில் பெறப்படுகின்ற மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான தகவலை உரிய பதிவேட்டில் பதிவு செய்து பதிவு செய்யப்பட்ட பதில் சரியான முறையில் பதிவாகி உள்ளதா என்பதனை அனைத்து துறை அலுவலர்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.  இதில் எந்தவித காலதாமதமும் செய்யக்கூடாது.  துறை அலுவலர்கள் துரிதமாக பணியாற்ற வேண்டும்  என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்தறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.5ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் ரூ.2லட்சம் மதிப்பிலும், வருவாய் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை, ஆக மொத்தம் 20 பயனாளிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், மீன்வளத்துறையின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வண்ண மீன் பண்ணை அமைக்க மானியமாக 2 பயனாளிக்கு தலா ரூ.1லட்சத்து 50ஆயிரமும், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1 பயனாளிக்கு வீட்டுப் பக்கத்தில் வண்ண மீன் பண்ணை அமைக்க ரூ25ஆயிரமும் ஆகமொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.5லட்சத்து 25அயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்பு திட்டம் கொங்கன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் புமிை, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ரெங்கன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்