முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெப்ஸி புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவராக அமீர் வெற்றி

புதன்கிழமை, 20 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 20 - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு பெப்ஸிக்கு 2012 2014 ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் தலைவராக இயக்குனர் அமீர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பேட்டியிட்ட விசு தோல்வி அடைந்தார். தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் ஒட்டு மொத்த அமைப்பு பெப்ஸி  இதில் 24 சங்கங்கள் அங்கம் வகிக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக வி.சி.குகநாதன் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பெப்ஸியின் தற்காலிக தலைவராக ராமதுரை செயல்பட்டு வந்தார். தற்போது கடந்த ஆண்டுக்கான பதவிக்காலம் முடிவு அடைகிறது. இந்த சூழலில் 2012 - 2014 ஆண்டுக்கான 12 பதவிக்கான தேர்தல் நேற்று சென்னையில் உள்ள பெப்ஸி அலுவலகத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அதிகாரி கே.நாராயணன் மேற்பார்வையில் நடந்தது. இந்த தேர்தலில் பெப்ஸி பொதுக்குழு உறுப்பினர்கள் 65 பேர் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள். இந்த 65 பேரும் வாக்களித்து பெப்ஸி பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன்படி நேற்று வாக்களித்தனர்.
இயக்குனர் அமீர் தலைமையில் தலைவர் பதவிக்கு அமீர் சுல்தான், செயலாளர் சிவா,துணைதலைவர்கள் அங்க முத்து, பாரதி, ராஜாமணி, ராமன் அபரிகிரிதான். துணை செயலாளர்கள் பாலன் தனபால், ஹேமேந்திரராவ், கண்ணன், குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.விசு தலைமையில் தலைவர் பதவிக்கு விசு, துணைத்தலைவர் எஸ்.ஆர் .சந்திரன் , ஜீவா, ராமன், ஆர்.வீரமணி, பொது செயலாளர் உமா சங்கர் பாபு, து.பொ.செயலாளர் ஹேமந்த் எஸ்.வி.குமார், ராஜா போட்டியிட்டார்கள். குறைந்த வாக்குகள் என்பதால் பிற்பகலில் வாக்குகள்  எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குனர் அமீர் 37 வாக்குகள் பெற்று பெப்ஸி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதே அணியை சேர்ந்த சிவா 34 வாக்குகள் பெற்று பொது செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அமீரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசு 28 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அமீர் வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியை ஆரவாரமாக கொண்டாடினார்கள்  பின்னர் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது:- இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த  அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண உழைப்பேன் எப்போதும் தொழிலாளர்கள் பக்கம் என்னோட செயல்பாடுகள் இருக்கும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்