முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களின் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்; கலெக்டர் அறிவிப்பு

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.- 20 - சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட கலெக்டர்.அன்சுல்மிஸ்ரா  தெரிவித்தார். தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில், ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறித்துவர் டி இஸ்லாமியர் டி புத்தம் டி சீக்கியர் மற்றும் பாரசீகிய மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியர்களின் பெற்றோர் டி பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்;வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை டி ஆதிதிராவிடர் நலத்துறை டி இதர அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள், நலவாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.  ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேல்நிலை பள்ளிகளில் கல்வி பயில்பவர்கள் றறற.வ.ெபழஎ.டிெடிஉஅடிஉஅறடிறநடகளஉாநஅநளூஅழெசவைநைளடிாவஅ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை புதியது டி புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை புர்ைத்தி செய்து அத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து 31.07.2012க்குள் கல்வி நிலையங்களில் தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் விண்ணப்ப படிவத்தை 30.09.2012க்குள் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.  அப்போது தான் ஆன்லைன் மூலம் கல்வி நிலையங்களில் அனுப்பிய விபரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சிறுபான்மை மாணவ, மாணவியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து மேல்நலைக்கல்;வி விண்ணப்பங்களுக்குரிய புதியது மற்றும் புதிப்பித்தல் கேட்பு பட்டியல்களை 15.08.2012க்குள்ளும், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்த விண்ணப்பங்களை புதியது மற்றும் புதிப்பித்தல் கேட்பு பட்டியல்களை 15.10.2012க்குள்ளும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரிடம் குறுந்தகுடுடன் சமர்ப்பிக்க வேண்டும்.  கல்வி உதவித்தொகைகள், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்படுவதால் மாணவ, மாணவியர்கள் வங்கி கணக்கு எண் (ஊழசந டீயமெ ளுநசஎஉைந யுஉஉழரவெ ரேஅடிநச) மற்றும் வங்கிக்கிளை குறியீடு, 11 இலக்க ஐகுளு ஊழனந எண்களை தவறாது விண்ணப்பத்தில் குறிப்பிடல் வேண்டும்.  இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொள்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்