முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டி இலங்கை அணி அபார வெற்றி

புதன்கிழமை, 20 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, ஜூன். - 20  - பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற் றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப் பட்டது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், ஆல்ரவுண்டர் மேத்யூஸ் அதிர டியாக ஆடி அணியின் வெற்றியில் முக் கிய பங்கு வகித்தார். அவருக்கு பக்கப லமாக சண்டிமால் மற்றும் சங்கக்கரா ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, குல சேகரா மற்றும் மென்டிஸ் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். அவர் களுக்கு ஆதரவாக மலிங்கா, மற்றும் பெரீரா ஆகியோர் பந்து வீசினர்.  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான 5 -வது மற்றும் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெ ற்றது. இதில் டாசில் வெற்றி பெற்ற பாக். அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
முதலில் களம் இறங்கிய  பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்னை எடுத் தது. அந்த அணி சார்பில், 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.
துவக்க வீரர் இம்ரான் பர்ஹட் 63 பந்தி ல் 56 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். உமர் அக்மல் 61 பந்தில் 55 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, அசார் அலி 30 ரன்னையும், அசாத் சபீக் 38 ரன்னையும், மிஸ்பா உல் ஹக் 32 ரன் னையும், எடுத்தனர்.  இலங்கை அணி தரப்பில், குலசேகரா 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். மென்டிஸ் 30 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங் கா மற்றும் பெரீரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  இலங்கை அணி 248 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம்  என்ற இலக்கை பா கிஸ்தான் அணி வைத்தது. அடுத்து கள ம் இறங்கிய அந்த அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்னை எடுத் தது.  இதனால் இலங்கை அணி இந்த 5 - வது ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3- 1 என்ற கணக்கில் கைப்ப ற்றியது. இலங்கை அணி சார்பில் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் 76 பந்தில் 80 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக் சர் அடக்கம். தவிர, சண்டிமால் 54 ரன் னையும், சங்கக்கரா 40 ரன்னையும், மெ ன்டிஸ் 19 ரன்னையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில், சோகைல் தன்வீர் 42 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சாகித் அப்ரிடி 2 விக்கெட்டையும், மொகமது ஹபீஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மேத்யூசும், தொடர் நாயகனாக பெரீராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago