முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் 7 புதிய மாணவர் விடுதிகள்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 21 - பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்ட 7 புதியமாணவர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா  திறந்துவைத்தார்.  மேலும் வஃபு வாரியத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிக் கொடைகளையும் அவர் வழங்கினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் (19.6.2012) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 7 மாணவர் விடுதிகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 7 நபர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிலுவைத் தொகையான 54 லட்சத்து 31 ஆயிரத்து 347 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கரூர் மாவட்டம், கரூரில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; மதுரை மாவட்டம், பாலமேடு மற்றும் சமயநல்லூரில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள் தலா 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவள்ளூர் மாவட்டம், செங்காட்டனூரில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி 54 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நாமக்கல் மாவட்டம், ஏளுரில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் மற்றும் சீர்காழியில் மிகப்பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள் தலா 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 3 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தலா 50 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட 7 மாணவர் விடுதிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் (19.6.2012) காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார்.

வக்ஃபு வாரியத்தில் பணிக்கொடைகள்: மேலும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகை மற்றும் இதர பயன்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் நிலவிய நிதிப்பற்றாக்குறை காரணமாக நீnullண்டகாலமாக வழங்க இயலாத நிலையில் இருந்தது.   தமிழக   முதலமைச்சர்   ஜெயலலிதா  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வின்போது இதனை கனிவுடன் பரிசீலனை செய்து வக்ஃப் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்க ஒரு முறை மானியமாக வக்ஃப் வாரியத்திற்கு மூன்று கோடி ரூபாய் வழங்க ஆணையிட்டார்.  தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் nullநீண்டகாலம் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பின்னரும் சுமார் ஐந்து ஆண்டு காலமாக ஒய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை கிடைக்க பெறாமலிருந்த 38 ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயனடைவர். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் nullண்ட காலம் பணியாற்றி ஒய்வு பெற்ற 7 நபர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிலுவைத் தொகையான 54 லட்சத்து 31 ஆயிரத்து 347 ரூபாய்க்கான காசோலையினை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று முன்தினம் (19.6.2012) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர்  மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்