முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் தடை

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 21 - இப்ராகிம் ராவுத்தர் கூட்டும் படஅதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு மற்றும் அட்ஹாக் கமிட்டிக்கு  ஐகோர்ட்டு  தடை விதித்துள்ளது.   இப்ராகிம் ராவுத்தர்  தலைமையிலான அட்ஹாக் கமிட்டிக்கு தடைவிதிக்க கோரி ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தாணு சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது: கடந்த ஏப்ரல் 15​ந்தேதி தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளராகிய நான் ஆகிய மூவரும் சங்கத்தில் இருந்து nullநீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.   அட்ஹாக் கமிட்டியில் எடுத்த முடிவை எதிர்த்து தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆகவே அவரது அட்ஹாக் கமிட்டி மற்றும் பொதுக்குழுவுக்கு  தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.   இந்த மனு nullநீதிபதி சுப்பையா முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது.  தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்,எஸ்.ஏ.சந்திரசேகர்  அட்ஹாக் கமிட்டி செயல்பட தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பிரதான வழக்கு தொடர்பாக  nullநீதிபதி அட்ஹாக் கமிட்டி  தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்