முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் வீரர்களுக்கு: கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டிற்காக விளையாடுங்கள்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜூன். - 21 -  இந்திய டென்னிஸ் வீரர்கள் கருத்து வே றுபாடுகளை மறந்து நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று மத்திய வெளி  யுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிரு ஷ்ணா அறிவுரை வழங்கி இருக்கிறார்.  மேலும், அகில இந்திய டென்னிஸ் சங் க தலைவரான அனில் கண்ணா, அனைத்து வீரர்களையும் தனித் தனியாக சந்தி த்து பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிர ச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என் றும் கிருஷ்ணா கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ். எம். கிருஷ்ணா அகில இந்திய டென்னி ஸ் சங்கத்தின் கெளரவத் தலைவராகவு ம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக் கது.  லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, மற் றும் ரோகன் பொபண்ணா ஆகிய 3 வீர ர்களும் தங்களது சொந்தப் பிரச்சினைகளை மறந்து நாட்டின் நலன் கருதி கெளரவம் கருதி விளையாட வேண்டும். சொந்த பிரச்சினைகளுக்காக நாட்டிற் கு அவப் பெயர் உருவாக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். டென்னிஸ் வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள இந்தப் பிரச்சினையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் எத னையும் வலியுறுத்தாது என்று மத்திய அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்த தைத் தொடர்ந்து கிருஷ்ணா மேற்கண்டவாறு கூறி இருக்கிறார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான இரட்டையர் பிரிவில் யார் யார் பங்கேற்பார்கள் என்பதற்கான வீரர்கள் தேர்வில் தான் தலையிட முடி யாது என்று அமைச்சர் மக்கான் ட்வீட் இணைய தளத்தில் தெரிவித்து இருந் தார். மேலும், இந்தப் பிரச்சினையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தலையிடாது என்றும், நாட்டின் நலன் கருதி அகில இந்திய டென்னிஸ் சங்கம் வீரர்கள் தேர்வை மேற்கொள்ளும் என் றும் அவர் கூறியிருந்தார். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனி ல் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. இதில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இன்னும் வீரர் கள் முடிவாகவில்லை. டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டருடன் இணைந்து ஆடுமாறு மகேஷ் பூபதி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
பயசுடன் இணைந்து ஆட வேறு ஒரு இளம் வீரரை தேர்வு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொ டர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் வீரர்களை அகில இந்திய டென்னிஸ் சங்கம் இன்று முடிவு செய்யும் என்று தெரிய வருகிறது.
---------------------  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago