முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலியுகம் பட இசை விழாவில் எழுத்தாளர்கள் மோதல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.22 - திரைப்படங்களை விமர்சிக்க எழுத்தாளர் மனுஷய புத்தினுக்கு அருகதை கிடையாது என்று கலியுகம் பட இசை விழாவில் கூறினார் கவிஞர் அறிவுமதி. விக்ரம் புரொடக்ஷன் சார்பில் உருவாகியிருக்கும் படம் கலியுகம் இந்த  படத்தை யுவராஜ் அழகப்பன் இயக்கியிருக்கிறார். ஏ.வி.விக்ரம் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின், தாஜ்நார், அருணகிரி ஆகியோர் இசையமைத்து உள்ளனர். புதுமுகங்கள் வினோத், அஜய், நாயகர்கள், நயாகியாக நித்தி கெய்லர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரசாத் லேப்தியேட்டரில் நேற்று முன் தினம் நடந்தது. விழாவில் எடிட்டர் மோகன் கவிஞர் அறிவு மதி, மோகன் ராஜன், இயக்குனர்கள் சசி, ராஜேஷ், சுசீந்தரன் மனுஷயபுத்திரன், நடிகர் ஸ்ரீகாந்த் படத்தின் இசையமைப்பாளர்கள், நடிகர், நடிகைகள் என பலர் கலந்து கொண்டனர். இசை தட்டை எடிட்டர் மோகன் வெளியிட மேடையில் இருந்தவர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் வாழ்த்தி பேசவந்த கவிஞர் அறிவு மதி கூறியதாவது:-

இப்போது வரும் புதிய இயக்குனர்கள் நல்ல படைப்புகளை தந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் தமிழ் சினிமா பேசப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் பாடல்கள் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் நல்ல இயக்குனர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்ட வேண்டும். விமர்சனம் என்கிற பெயரில் அவர்களை முளையிலேயே பேனா முனையால் கிள்ளிவிடக் கூடாது. குறிப்பாக இங்கே ஒன்றை சொல்ல வேண்டும் எழுத்தாளர் மனுஷயபுத்திரன் ஒரு வாரபத்திரிகையில் வழக்கு எண் 18/9 படத்தை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அந்த படத்தில் வரும் பாலன் கேரக்டர் எவ்வளவு அற்புதமானது. அதே போல நாயகியாக வரும் பாலனின் மகள் பாத்திரம் எவ்வளவு நேர்மையானது. இதை இலக்கிய வாதி என்ற பெயரில் விமர்சித்து உள்ளார். இதே போல அழகர் சாமியின் குதிரை படத்தையும் காலசுவடு பத்திரிகை முன்பு விமர்சனம் செய்திருந்தது. நல்ல கதையை சமூக உணர்வோடு கொடுப்பவர்களை பாராட்ட வேண்டும் மாறாக புதைக்க கூடாது என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மனுஷயபுத்திரன் கூறும் போது, 

இங்கே அறிவு மதி என்னோட விமர்சனம் பற்றி கூறினார். நான் வேண்டும் என்று வழக்கு எண் படத்தை விமர்சிக்கவில்லை. தமிழ் சினிமாவில் எவ்வளவோ குப்பை படங்கள் வருகிறது. ஒரு சில நல்ல படங்களைதான் பார்க்க முடிகிறது. அந்த வகையில் மணிரத்தினம், பாலா பாலாஜி சக்திவேல், வசந்த பாலன் இப்படி பலரை குறிப்பிட முடியும். இவர்களுடைய படங்களைத்தான் விமர்சிக்க முடியும் இதில் என்ன தவறு இருக்கிறது. ஏன் அறிவு மதி கோபப்படுகிறார் என்பது எனக்கு புரியவில்லை என்றார். உடனே எடிட்டர் மோகன் எழுந்து நீங்கள் இயக்குனர்கள் மீது அக்கறை உள்ளவர் என்றால் தனிப்பட்ட முறையில் அந்த இயக்குனரிடம் உங்கள் கருத்துகளை கூறியிருக்கலாம்.

நீங்கள் எழுதுவது மூலம் படம் பார்க்க வருபவர்கள் தியேட்டருக்கு வராமல் போய்விடுகிறார்கள். இதனால், கமர்ஷியல் பாதிக்கப்படுகிறது என்றார். அப்போது மீண்டும் அறிவு மதி எழுந்து தமிழ் படங்களை குப்பை என்று நீங்கள் சொன்னால் புத்தக்கண் காட்சியில் இடம் பெற்ற உங்கள் படங்கள் எல்லாம் குப்பைதானா. கமல், மணிரத்தினம், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தான் இலக்கிய வாதிகளா என்று கடுமையாக பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் அமைதியாகி விழா முடிவடைந்தது.

கலியுகம் இசை வெளியீடு

இசை தட்டை எடிட்டர் மோகன் வெளியிட இயக்குனர்கள் சசி, ராஜேஷ், இசையமைப்பாளர் தாஜ்நார் படத்தின் நாயகன் வினோத், அஜய், நாயகி நித்திகெய்லர் என பலர் பெற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்