முக்கிய செய்திகள்

தோல்வி பயத்தால் தி.மு.க.வினர் - சுஷ்மா சுவராஜ்

bjp sushma

 

சென்னை, ஏப்.1 - தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தான் நடந்தகொள்கிறது. ஆனால், அதே சமயத்தில் தி.மு.க.வினர் தோல்வி பயத்தால், தேர்தல் ஆணையம் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என சுஷ்மா சுவராஜ் கூறினார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவருமான சுஷ்மாசுவராஜ்  நேற்று சென்னை வந்தார். கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பிரச்சார சி.டி.யை வெளியிட்டார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கைத்தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அட்டூழியம் ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாலும், இலங்கை தூதரக அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதாலும், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று கூறவில்லை. ஆனால், அதே சமயத்தில் கணிசமான அளவுக்கு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பா.ஜ.க. உறுப்பினர்கள் செல்வார்கள். அதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது. மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு இருப்பதாக கருதுகிறேன். பாராளுமன்றத்தில் ஆக்கப்nullர்வமான எதிர்க்கட்சியாக இருந்து விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசி இருக்கிறோம். இதனால் மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் உள்ளது. சட்டமன்றத்திலும் உங்கள் பிரச்சினை பற்றி பேச பாரதீய ஜனதாவை ஆதரியுங்கள். தி.மு.க.செய்யும் தவறுகளை மறைக்க இலவசங்களை தந்து மறைக்கப்பார்க்கிறார்கள். இலவச திட்டங்களால் புத்திசாலிகளான தமிழக மக்களை ஈர்க்க முடியாது.

ஒரு காலத்தில் நிர்வாகத் திறமைக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இப்போது நிர்வாக சீர்குலைவும், ஊழலும் காணப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் மூத்த அமைச்சர் சிறையில் இருக்கிறார். அவர் மீது 80 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்களும் இந்த தேர்தல் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் எங்கள் கணக்கை தொடங்குவோம். தி.மு.க. ஒரு காலத்தில் எங்கள் கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. கடைசி வரை ஆட்சியில் பங்கு பெற்று விட்டு சந்தர்ப்பவாதத்தால் பிரிந்து சென்றார்கள். கொள்கை ரீதியாக விலகி போகவில்லை. 

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் ஆட்டத்தை கிரிக்கெட்டாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அதில் அரசியலை சேர்க்கக்கூடாது.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தான் நடந்துகொள்கிறது. சரியான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதே சமயத்தில் தோல்வி பயத்தால் கலங்கி போயுள்ள தி.மு.க.வினர் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இவ்வாறு சுஷ்மாசுவராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: