முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி -20 வங்கதேசம் அபார வெற்றி தெ. ஆ. மீண்டும் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

ஹராரே, ஜூன். - 24  -  ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 20 -க்கு 20 முத்தரப்பு தொடர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெ ட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது.  இந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப் பிரிக்கா அணிக்கு இது 2-வது தோல்வி யாகும். முன்னதாக கடந்த 2 நாட்களுக் கு முன் நடந்த லீக்கில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்தது.  டி -20 முத்தரப்பு தொடரின் 5 -வது லீக் ஆட்டம் நேற்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிக ள் மோதின.  இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழ ப்பிற்கு 129 ரன்னை எடுத்தது.  4-வது வீரராக இறங்கிய ஆன்டாங் அதி கபட்சமாக, 36 பந்தில் 40 ரன்னை எடுத் தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். கேப்டன் அம்லா 19 பந்தி ல் 20 ரன்னை எடுத்தார். தவிர, டுபிளீச ஸ் 13 ரன்னையும், பெகார்டியன் 16 ரன் னையும், மார்கெல் 12 ரன்னையும், பீட்டர்சன் 11 ரன்னையும் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில், எலியாஸ் சன்னி 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். தவிர, மொர்டஜா, மக்ம துல்லா, மற்றும் ஜியாயுர் ரெஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  வங்கதேச அணி 130 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை தெ ன் ஆப்பிரிக்கா அணி வைத்தது. அடுத் து களம் இறங்கிய அந்த அணி 19.5 ஓவ ரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்னை எடுத்தது.
இதனால் வங்கதேச அணி இந்த லீக்கி ல் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது.
வங்கதேச அணி தரப்பில், மொகமது அஸ்ரப்புல் அதிகபட்சமாக, 40 பந்தில் 40 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்ட ரி அடக்கம். தவிர, மக்மதுல்லா 28 ரன் னையும், ரெஹ்மான் 27 ரன்னையும், எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில், டிலாங்கே 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, பர்னெல் 2 விக்கெட்டை யும், மோரிஸ் மற்றும் மார்கெல் ஆகி யோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக மக்மதுல்லா தேர்வு செய்யப்பட்டார்.
--------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்