முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீக்கப்பட்ட பைலட்டுகளை சேர்க்ககோரி 11 பைலட்டுகள் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 25 - பணியிலிருந்து நீக்கப்பட்ட 101 பைலட்டுகளை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி ஏர் இந்தியா பைலட்டுகள் 11 பேர்  நேற்று காலவரையற்ற பட்டினி போராட்டத்தை துவக்கினர்.ட்ரீம்லைன் விமான பயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து ஏர் இந்தியா பைலட்டுகள் கடந்த மே மாதம் 8 ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இந்த போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 440 பைலட்டுகள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 101 பைலட்டுகளை ஏர் இந்தியா நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.  பணி நீக்கம் செய்யப்பட்ட இந்த பைலட்டுக்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரி ஏர் இந்தியா பைலட்டுகள் 11 பேர்  நேற்று காலவரையற்ற பட்டினி போராட்டத்தில்  ஈடுபட்டனர். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே பாணியில் இவர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் பைலட்டுகள் இது போன்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஏற்கனவே பைலட்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைலட்டுகளுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்த்தோம். ஆனால் அவர்களும் அதை ஏற்கவில்லை.எனவே இந்த விஷயத்தில் அரசு எதையும் செய்ய  இயலாது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்