முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக வளர்ச்சியை எட்ட தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 25 - நாட்டில் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட மத்திய அரசு  தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் மெக்ஸிக்கோ, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மெக்சிகோவில் ஜி. 20 அமைப்பின் உச்சி மாநாட்டிலும் பிரேசிலில் ரியோ  பிளஸ் உச்சி மாநாட்டிலும்  கலந்து கொண்டு விட்டு  அவர் தனி விமானத்தில் டெல்லி திரும்பினார். இந்த விமானத்தில் செய்தியாளர்களுக்கு மன்மோகன் சிங் பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறுகையில்,  நாட்டை  முன்னேற்றப்பாதையில் கொண்ட செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அவர்  கூறினார். இந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு சர்வதேச தீர்வுகாண முடியாது என்பது கடந்த சில நாட்களாக தனக்கு தெரிந்துள்ளது என்றும் எனவே இப்பிரச்சினைகளுக்கு  இந்தியாவே தீர்வுகாண வேண்டியது  அவசியம் என்றும் அதற்காகத்தான் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்றும் அவர் சொன்னார். அந்த வகையில் இந்த ஆண்டு  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை  எட்டும் என்றும் அவர் நம்பிக்கை  தெரிவித்தார். நாட்டில் பொருளாதார வளர்ச்சி சற்று மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டின் பிற்பகுதியில்  7 சதவீதத்தை எட்டி விடும் என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago