முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி மகன் திருமணம்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

நாகபுரி,ஜூன்.- 25 - பா.ஜ.க. தலைவர் நிதின்கட்கரியின் மகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். பா.ஜ.க. தலைவர் நிதின்கட்கரியின் மகன் நிகிலுக்கும் மணமகள் ருதுஜாவுக்கும் மராட்டிய சம்பிரதாயப்படி, காந்திசாகர் ஏரி அருகே உள்ள ராஜ்வாடா அரண்மனையில்  கடந்த வியாழக்கிழமை அன்று திருமணம்  நடைபெற்றது. திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும்,சனிக்கிழமையும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை அன்று விதர்பாகிரிக்கெட் அசோசியேஷனஸ் மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களைவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மாசுவராஜ், மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் அருண்ஜெட்லி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி,மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்,சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்,கர்நாடக முதல்வர் சாதனந்தகவுடா,கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டியூரப்பாமற்றும் நிர்வாகிகள் முகேஷ்அம்பானி, அனில்அம்பானி, ரத்தன்டாட்டா, அமிதாப்பச்சன், ஹேமமாலினி உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்