முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை 2,298 பக்தர்களுடன் துவங்கியது

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, ஜூன் - 25 - அமர்நாத் யாத்திரை நேற்று 2,298 பக்தர்களுடன் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலை பகுதியில் அமர்நாத் குகை  கோவில் உள்ளது.  இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான  யாத்திரை நேற்று ஜம்மு நகரின் அடிவாரத்தில் உள்ள பகவதி  நகர் யாத்திரி நிவாஸ் என்ற இடத்திலிருந்து  துவங்கியது. முதல் அணியாக இந்த யாத்திரையில் 2,297 பக்தர்கள் புறப்பட்டனர். இந்த முதல் யாத்திரையை காஷ்மீர் மாநில சுற்றுலா துறை அமைச்சர்  நவாங்  ரிக்சின் ஜோரே  கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.  இந்த அமர்நாத் யாத்திரை துவக்க விழாவில் காஷ்மீர் மாநில  தொழில்  துறை அமைச்சர் எஸ்.எஸ்.ஸ்லாத்தியா,  முதல்வரின் அரசியல் ஆலோசகர் தேவேந்திர சிங் ராணா ஆகியோரும் கலந்து கொண்டனர். முதல் அணியில் புறப்பட்டு சென்றுள்ள 2,298 பக்தர்களில்  1,470 பேர் ஆண்கள் , 477 பேர் பெண்கள்,  241 பேர்   சாதுக்கள், 110 பேர் குழந்தைகள். மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் 29 பஸ்கள் உள்பட மொத்தம் 69 வாகனங்களில் இவர்கள் புறப்பட்டு  சென்றுள்ளனர்.

அமர்நாத் பக்தர்களுக்கு வசதியாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago