முக்கிய செய்திகள்

மொகாலி வெற்றி சின்னமாக போபாலில் கிரிக்கெட் ஸ்டேடியம்

Sivraj

 

போபால்,ஏப்.1 - மொகாலியில் நடைபெற்ற அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் போபால் நகரில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என்று மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றுமுன்தினம் உலக கோப்பைக்கான கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது. இந்த வெற்றியை நினைவு படுத்தும் வகையில் போபால் நகரில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேற்று போபால் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்திய அணி வெற்றியால் நான் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கினேன். இந்த வெற்றி சின்னமாக போபால் நகரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என்றார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு பரிசுத்தொகை எதுவும் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு கிரிக்கெட்டுக்கு மேலும் பணம் தேவையில்லை என்று பதில் அளித்தார். இதர மாநில அரசுகள் பணம் கொடுக்க விரும்பினால் ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கு கொடுத்து உதவலாம் என்று செளகான் ஆலோசனை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: