முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஜூன். - 25 - ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் டி - 20 முத்தரப்பு தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தி

யாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்

கா அணி தரப்பில், துவக்க வீரர் லெவி அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து

அணியை வெற்றிப் பாதைக்கு அழை த்துச் சென்றார். அவருக்கு பக்கபலமா

க ஆன்டாங், பெகார்டியன், மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, பர்னெல் அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவரு க்கு ஆதரவாக மோரிஸ், பீட்டர்சன் மற்றும் மார்கெல் ஆகியோர் பந்து வீசினர். 20 -க்கு 20 முத்தரப்பு தொடரில் ஹரா ரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று 6-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதி

ல் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பா ப்வே அணிகள் மோதின.  முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். துவக்க வீரர் மசகட்ஜா 34 பந்தில் 36 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். கிரமர் 27 பந்தில் 36 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்ட

ரி அடக்கம். தவிர, மட்சிகென்யேரி 22 ரன்னையும் சிபாண்டா 9 ரன்னையும் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா தரப்பில், பர்னெல் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு

த்தார். தவிர, மோரிஸ், பீட்டர்சன் மற்றும் மார்கெல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி  125 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தி

ல் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின்

மூலம் அந்த அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. 

இதற்கு முந்தைய 2 லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதனால் அந்த 

அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. 

தெ.ஆ. தரப்பில், துவக்க வீரர் லெவி 30 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, ஆன்டாங் 32 பந்தில் 24 ரன்னையும், பெகார்டியன் 27 பந்தில் 19 ரன்

னையும், டுபிளெசிஸ் 14 ரன்னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், வாலர் 3 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்

தார். தவிர, போபு மற்றும் ஜார்விஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பர்னெல் தேர்வு செய்யப்பட்டார். 

-----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago