முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் அச்சுதானந்தனை தோற்கடிக்க திட்டமா?

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,ஏப்.1 - முதல்வர் அச்சுதானந்தனை தோற்கடிக்க இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பிரிவு ரகசிய திட்டம் தீட்டி செயல்படுவதாக கூறப்படுவதை பினராய் விஜயன் திட்டவட்டமாக மறுத்து உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலோடு கேரள சட்டசபைக்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் அச்சுதானந்தனுக்கு முதலில் டிக்கெட் கொடுக்க கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. பின்னர் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் அச்சுதானந்தனுக்கு மறுபடியும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வெற்றிபெற்றால் மீண்டும் முதல்வராக வர முயற்சி செய்யலாம் அதனால் அவரை தோற்கடிக்க இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பிரிவு ரகசிய திட்டம் தீட்டி செயல்படுவதாக கூறப்படுகிறது. இதை இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் அச்சுதானந்தனின் அரசியல் எதிரியுமான பினராய் விஜயன் அடியோடு மறுத்துள்ளார். ஆனால் மேலிடத்தின் வற்புத்தலின் காரணமாகத்தான் அச்சுதானந்தனுக்கு இந்த தடவை டிக்கெட் கொடுக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கொடுப்பது குறித்து ஒரு கட்டத்தில் நாங்கள் விரிவான முறையில் ஆய்வு செய்து முடிவு எடுத்தோம். அந்த நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் அச்சுதானந்தன் பெயர் இருந்தது என்று விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கொடுப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து கட்சி ஒரு தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தபோது ஒரு குழப்ப நிலை நிலவியது. அதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. இதற்கு காரணம் நாங்கள் ஒரு சரியான தகவலை கொடுக்காததுதான் என்றும் விஜயன் கூறினார். தேர்தல் முடிந்த பின்னர் கட்சியின் வழக்கப்படி யார் முதல்வர் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விஜயன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago