முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கைது

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 26 - மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அபுகம்சா டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.  சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதி கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டான். இதில் தொடர்புடைய மற்றவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் துபாயில் இருந்து டெல்லிக்கு தீவிரவாதி அபுகம்சா விமானத்தில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு உளவு பிரிவு உயரதிகாரிகள் ரகசியமாக சென்றனர். விமானத்தில் இருந்து அபுகம்சா இறங்கியதும் அவனை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

30 வயதான அபுகம்சா மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன். அவன் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத குழுவில் சேர்ந்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்தான். அவனுக்கு பல பெயர்கள் உண்டு. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அபுகம்சாவை, 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அபுகம்சாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அவன் தேடப்பட்டு வந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. லஸ்கர் இ தொய்பாவின் இந்திய ஏஜண்டாகவும் அவன் செயல்பட்டு வந்தான். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனாக மாறினான். அது மட்டுமல்லாமல் பல தீவிரவாதிகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago