முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசின் பணபலத்தை ஆராய பரதன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.1 - கேரள மாநிலத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பணம் வாங்கிக் கொண்டுதான் தேர்வு செய்தார்கள் என்று அந்தக் கட்சியின் கே.கே. ராமச்சந்திரன் மாஸ்டர் கூறியிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பரதன் வலியுறுத்தினார். 

கேரள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட ராமச்சந்திரன் மாஸ்டருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், 

பணம் கொடுத்தவர்களுக்குத்தான் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். இப்படி தேர்தலில் போட்டி போடுவதற்கே பணம் கொடுப்பவர்கள் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று கூறிய தேர்தல் கமிஷன் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

இந்த குற்றச்சாட்டை மாற்றுக் கட்சியினரோ, எதிர்க்கட்சியினரோ கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே கூறியிருக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்