முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுகல் - ஸ்பெயின் முதல் அரையிறுதியில் மோதல்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டன்ஸ்க், ஜூன். 27 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியில் உக்ரைன் நாட்டில் இன்று நட க்க இருக்கும் முதல் அரை இறுதியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.  ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டி கடந்த 8 -ம் தேதி துவங்கியது. முன்னதாக லீக் போட்டிகள் நடந்தன. இதில் 8 அணிகள் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறின. 8 அணிகள் குறைவான புள்ளிகள் பெற்று வெளி யேறின. 

கடந்த 21 -ம் தேதி நடந்த முதல் கால் இறுதியில் போர்ச்சுகல் மற்றும் செக். குடியரசு அணிகள் மோதின. இறுதியில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இதில் செக். குடியரசு அணியின் பலம் வாய்ந்த தற்காப்பு அரணை முறியடித்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரா  ன ரொனால்டோ 1 கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

அடுத்து நடந்த 2-வது கால் இறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற் றும் கிரீஸ் அணிகள் பலப்பரிட்சை நட த்தின. இதில் ஜெர்மனி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. 

இந்தப் போட்டியில் 3 முறை சாம்பிய ன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 2- 1 என்ற கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த் தியது நினைவு கூறத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து நடந்த 3-வது கால் இறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் தனது தகு திக் கேற்ப அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 

இந்த 3 -வது கால் இறுதியில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. பிரான்ஸ் அணி இதில் எவ்வளவோ போராடியும் ஒரு கோல் கூட போட முடியவில்லை. 

அடுத்து நடந்த 4-வது கால் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிக ள் மோதின. இதில் ரெகுலர் டையத்தி ல் ஒரு அணியாலும் கோல் போட முடியவில்லை.

இறுதியில் பெனால்டி ஷூட் அளிக்கப் பட்டது. இதில் இத்தாலி 4- 2 என்ற கண க்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவியது. 

யூரோ கோப்பையின் முதல் அரை இறு திச் சுற்று ஆட்டம் இன்று உக்ரைன் நா  ட்டில்  உள்ள டான்ஸ்க் நகரில் நடக்கிறது.  இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெ யின் அணிகள் பலப்பரிட்சை நடத்து கின்றன. 

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வை என்பதால் இந்த முதல் அரை இறு தி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பெயின் அணி தோல்வியை சந்திகா மல் அரை இறுதியில் நுழைந்துள்ளது. அதே நேரம் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை. 

லீக் ஆட்டத்தில் குரோசியாவை 1- 0 என்ற கணக்கிலும், அயர் லாந்தை 4- 0 என்ற கணக்கிலும் வென்றது. இத்தாலி யுடன் 1- 1 என்ற கணக்கில் டிரா செய்த து. கால் இறுதியில் 2 - 0 என்ற கணக்கி ல் பிரான்சை தோற்கடித்தது. 

போர்ச்சுகல் அணி லீக் ஆட்டங்களில் 2 - 1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், 3 - 2 என்ற கணக்கில் டென்மார்க்கை யும் வென்றது. ஆனால் 0 - 1 என்ற கண க்கில் ஜெர்மனியிடம் தோற்றது. கால் இறுதியில் 1- 0 என்ற கணக்கில் செக். குடியரசை வென்றது. 

இரு அணியிலும் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். ஸ்பெயின் அணியில் டேவி ட் சில்வா, ஷபி அலோன்சா, ஷவி ஹெர்னாண்டஸ், கோல் கீப்பர் கேசிலா ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 

போர்ச்சுகல் அணியின் முதுகெலும்பாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனா ல்டோ உள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த 2 கோலும், கால் இறுதியில் செக். குடியரசுக்கு எதிராக அடித்த 1 கோலும் சிறப்பாக இருந்தது. 

2 முறை யூரோ கோப்பையை வெனற ஸ்பெயின் அணி 4-வது முறையாக இறு திப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 

போர்ச்சுகல் 2- வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்டையில் உள்ளது.  அந்த அணி 2004 - ம் ஆண்டு

இறுதிப் போட்டி வரை நுஓழைந்து கிரீ சிடம் தோற்று கோப்பையை இழந் தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago