முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீன மடத்தில் மீண்டும் போலீஸ் சோதனை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.27 - மதுரை ஆதீன மடத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மதுரை மாவட்ட இந்துமக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் சோலைகண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்து இருந்தார். 

சோலை கண்ணன் தபால் மூலம் அளித்த புகாரின்பேரில் 1972 ஆண்டு வனவிலங்கு சட்டத்தின் கீழ் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மதுரை ஆதீன மடத்தில் எந்த நேரமும் சோதனை நடத்தப்படலாம் என்று பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தில் சோதனை நடத்த போலீஸ் தரப்பில் இருந்து மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து உதவிபோலீஸ் கமிஷனர் துரைசாமி, விளக்குதூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், வி.ஏ.ஓ. முனியாண்டி, கவுன்சிலர் குமார் உள்பட 10 பேர் நேற்று காலை மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் மடத்தில் சோதனை நடத்துவதற்கான உத்தரவை காட்டினர். பின்னர் 11.30 மணி அளவில் இருந்து போலீசார் மடத்தில் சோதனை நடத்தினர்.

 மடத்தின் பூஜைஅறை, மாடியில் உள்ள தங்கும் விடுதிகள், சமையல் அறை உள்ளிட்ட ஆதீன மடத்தின் ஒவ்வொரு அறையாக போலீசார் சென்று புலிதோல், யானை தந்தம் உள்ளதா? என சோதனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்