முக்கிய செய்திகள்

இந்தியா-இலங்கை இறுதிப்போட்டியை காண ராஜபக்சே வருகிறார்

mahinda-rajapaksa

 

புதுடெல்லி. ஏப்.1 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தை பார்க்க இலங்கை அதிபர் ராஜ பக்சே இந்தியா வருகிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டியை காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி இந்தியா வந்திருந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று இந்தியா வந்த கிலானி மொகாலியில் நடந்த அரையிறுதிப்போட்டியை மன்மோகன் சிங்குடன் அமர்ந்து பார்த்தார்.

ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இருந்தாலும் மன்மோகன் சிங்குடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்திய பின் கிலானி பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

வருகிற 2 ம் தேதி மும்பையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உலக கோப்பை கிரிக்கெட்ட போட்டியின் இறுதி ஆட்டம் நடக்க உள்ளது.

இந்த இறுதி போட்டியை காண இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவும் இந்தியா வர இருக்கிறார்.

அரை யிறுதிப்போட்டியை இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் பார்த்தது போல இந்த இறுதிப்போட்டியை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேவும்  பார்க்க இருக்கிறார்கள்.

தெற்காசிய நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப்போட்டியை காண ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் புதுடெல்லியிலிருந்து மும்பை வர இருக்கிறார்.

இந்த போட்டியை பார்க்க மகிந்தா ராஜ பக்சே மும்பை செல்ரார் என்று கொழும்பு நகரில் இருந்து  கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: