முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போதை ஒழிப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 27 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூன்,27 - சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் கள்ளக்கடத்தல் எதிர்ப்பு தினம் ஆண்டு தோறும் ஜீன் மாதம் 26ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் போதை ஒழிப்பு மற்றும் கள்ளக்கடத்தல் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற வகையில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா,இ.ஆ.ப., அவர்கள் ாமனித குலம் மேன்மைக்காகவும், சமுதாய நன்மைக்காகவும், தனிப்பட்ட நலனுக்காகவும், போதைக்கு என்றும் அடிமையாக மாட்டோம், போதை பொருட்களை என்றும் உபயோகிக்க மாட்டோம் என்றும், உறுதியாகவும், மேலும் போதை பழக்கம் உள்ளோரை பக்குவமாக திருத்தி நல்வழிக்கு கொண்டுவர பாடுபடுவோம் என்றும் உறுதி கூறுகிறோம்ா என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

நமது நாட்டில் அதிகளவில் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களது உடல்நலம், ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க இளைஞர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. அப்பொழுதுதான் நாட்டின் இளைஞர்கள் முன்னேற முடியும். டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டும்தான் விற்கப்படும். தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மதுபான கடைகள் குடியிருப்பு பகுதிகளில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதுப்பு ஏற்படுவதாக செய்தியாளர் கேட்டதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுபான கடைகள் வைப்பதற்கு அரசு ஒருசில விதிகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் மதுபான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள், கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் ஆகிய பகுதிகளுக்கு அருகில் மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என அரசு ஆணை உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் நடைபெற உதவியாக இருந்து திருமணம் நடத்தி வைத்தாலோ, திருமண மண்டபம், சமுதாயக்கூடம், கோவில்களில் இடம் கொடுத்து திருமணம் செய்ய அனுமதித்தாலோ, குழந்தைத் திருமண தடைச்சட்டம் 2006ன்படி பிணையில் விடுவிக்க முடியாத குற்றம் புரிந்தவராக கருதப்பட்டு, இச்சட்டத்தின் மூலம் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.  மேலும், குழந்தை திருமணம் நடைபெற இடம் கொடுக்கும் திருமண மண்டப உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்