முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு: ந.சேதுராமன் நன்றி

புதன்கிழமை, 27 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - பிரமலைக்கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 80 ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  பிரமலைக்கள்ளர் இன மக்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்காக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை யின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலைக் கள்ளர் வகுப்பை சார்ந்த மக்களின் நலனுக்காக 24 மேல்நிலைப் பள்ளிகள், 25 உயர் நிலைப்பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகள், 211 ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 285 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 37,556 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழ்கிற முக்குலத்தோர் சமுதாய மக்களில் பிரமலைக் கள்ளர் இன மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் சீரமைப்பு நலப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 80 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் முடங்கி போகும் நிலையில் இருந்த இந்த பள்ளிகளை மறுசீரமைப்பு செய்து கள்ளர் இன மக்களின் மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.   இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்