முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு 2-வது இடம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.28 - சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில், இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதே போல் தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதில் மாமல்லபுரம் முதலிடத்திலும் உள்ளது. இது குறித்து, மத்திய அரசின் தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படும் உலக பிரசித்திப் பெற்ற நினைவு சின்னங்களுள் தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகம் பேர் வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் 10 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 70 ஆயிரம் அயல் நாட்டுப்பயணிகளும்  மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள ஆண்டு கையேட்டுப் புத்தகத்தில்  இத்தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில்  இரண்டாவது இடத்தைப்பிடித்திருப்பது திருவண்ணாமலை அருகிலுள்ள செஞ்சிக்கோட்டை. 2010 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பயணிகள் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேரும்,  அயல் நாட்டுப் பயணிகள் நான்கு ஆயிரம்  பேரும் இங்கு வந்துள்ளனர். இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தை திண்டுக்கல் மலைக்கோட்டை பிடித்துள்ளது. உள்நாட்டுப் பயணிகள் 35 ஆயிரம் பேரும், வெளிநாட்டுப் பயணிகள் 200 பேரும் திண்டுக்கல் மலைக்கோட்டையை கண்டு ரசித்துள்ளனர்.

100 ஆண்டுகளும் அதற்கு மேலுமான நினைவு சின்னங்கள் அல்லது இடங்கள் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றன. தேசிய தொல்லியல் துறையில் பாதுகாக்கும் நினைவு சின்னங்கள் என இவை அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் எட்டு நினைவு சின்னங்கள் தொல்லியியல் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகளுக்கு விற்கப்படும் நுழைவு சீட்டுக்களின்  மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை தொல்லியல் துறை தலைமை இயக்குனரகம் பதிவு செய்கிறது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வருவதில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த மொத்த சுற்றுலாப்பயணிகளில் 28 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இது மொத்தத்தில் 15.7 சதவிகிதம். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 58 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையில் மகாராஷ்டிரா முதல் இடம்  இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் 1.11 கோடி பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அதிகமான பயணிகள்  வந்த மாநிலம் ஆந்திரப்பிரேதசம்  இங்கு 1.55 கோடி பயணிகள் வந்தனர். உத்திரப்பிரதேசத்திற்கு 1.44 கோடி பயணிகள் வந்தனர் சுற்றுலாப்பயணிகள் வருகையில் இரண்டாவது இடத்தை உத்திரப்பிரதேசம் பிடித்துள்ளது.மத்திய சுற்றுலா அமைச்சகம் தயாரித்துள்ள புள்ளி விவரத்தில் இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago