முக்கிய செய்திகள்

கிருஷ்ணகிரியிலும் மாற்று வேட்பாளர் அதிகாரபூர்வமானார்

thangabalu1 0

 

சென்னை, ஏப்.1 - காங்கிரஸ் கட்சியின் மையிலை வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, தங்கபாலு அதிகாரபூர்வ வேட்பாளரான கதையைப் போல் கிருஷ்ணகிரியிலும், மனைவி வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், கணவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதனால் அவர் கணவர் சையது காங்கிரஸ் அதிகாரபூர்வ வேட்பாளரானார். 

இது குறித்த விபரம் வருமாறு:-

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 4,228 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனையின் போது 1,153 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 313பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

234 தொகுதிகளிலும் போட்டிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 பேர் உள்ளனர். மனுக்கள் தள்ளுபடி மற்றும் வாபஸ் காரணமாக மயிலாப்nullர், வேதாரண்யம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளில் அதிகாரப்nullர்வ வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்த 3 தொகுதிகளிலும் மாற்று வேட்பாளராக மனு செய்திருந்தவர்கள் அதிகாரப்nullர்வ வேட்பாளராக மாறி உள்ளனர். மயிலாப்nullர் தொகுதியில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த 2 மனுக்களிலும் கையெழுத்து போடாததால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வி.தங்கபாலு காங்கிரசின் அதிகாரப்nullர்வ வேட்பாளர் ஆனார். காங்கிரஸ் மேலிடமும் அவரை வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளது. 

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் ஹசீனா சையத்துக்கு பதில் மக்nullல் ஜான் என்பவரை புதிய வேட்பாளராக அறிவித்தது. ஆனால் மக்nullல்ஜான் மனு தாக்கல் செய்யாததால் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு செய்தார். 

இதனால் அதிகாரப்nullர்வ காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்nullர்வ வேட்பாளர் நான்தான் என்று ஹசீனா கூறினார். ஆனால் அவரை அதிகாரப்nullர்வ வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து ஹசீனா சையத் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். ஹசீனாவின் கணவர் சையத் கியாஸ் அல்ஹக் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் மாற்று வேட்பாளராக மனு செய்திருந்தார். ஹசீனா மனுவை வாபஸ் பெற்றதால் சையத் காங்கிரஸ் வேட்பாளர் ஆனார். ஆனால் சையத்துக்கு கை சின்னம் ஒதுக்க போட்டி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய சர்ச்சை எழுந்தது. அதிகாரப்nullர்வ வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளருக்கு கட்சி சின்னத்தை ஒதுக்க முடியும். அதிகாரப்nullர்வ வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுள்ளால் கை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சினை குறித்து நேற்று காலை தேர்தல் அதிகாரிகள் கலந்து பேசி விவாதித்தனர். பிறகு காங்கிரசின் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சையத்துக்கு கை சின்னம் ஒதுக்க ஒப்புதல் அளித்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

வேதாரண்யம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக சதாசிவம் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தனது மனுவில் சொத்து கணக்கை சரியாக காட்டாததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சின்னதுரை மனு செய்திருந்தார். அவர் வேதாரண்யம் தொகுதி பா.ம.க. புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே மனு தள்ளுபடியை எதிர்த்து ஜெயந்தி தங்கபாலு தேர்தல் கமிஷனிடமும், சதாசிவம் ஐகோர்ட்டிலும் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: