முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர போட்டி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.28 - சென்னையில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி  நிலவுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி.) எம்.பி.பி.எஸ்.சேர மாணவர்களிடம் வழக்கம்போல இந்த ஆண்டும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 140. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 127 இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 128 இடங்களும் உள்ளன.

இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் முற்பட்ட வகுப்பினருக்கு (எப்.ஓ.சி.) மொத்தம் 123 எம்.பி.பி.எஸ். இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் 106 இடங்களும் உள்ளன.

முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 123 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால் 200​க்கு 199.50 கட்​ஆப் மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும்.

பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களை பொறுத்தவரை ஓ.சி. பிரிவினருக்கு உரிய 123 இடங்கள். அவர்களது வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 106 இடங்கள என மொத்தம் 229 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதனால் 200​க்கு 199.25 கட்​ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட பிற வகுப்பினர் பொதுப்பிரிவு இடங்கள், தங்களது ஒதுக்கீட்டு இடங்களை கணக்கிட்டு சென்னை கல்லூரிகள் கிடைக்கும் வாய்ப்பை எளிதாக மதிப்பீட்டு கொள்ள முடியும்.இந்த ஆண்டு 200​க்கு 200 கட்​ஆப் மதிப்பெண்ணை மொத்தம் 16 மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago