முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பேருந்து விபத்து: காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி

புதன்கிழமை, 27 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.28 - சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 38 பயணிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும், நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நேற்று பிற்பகல் சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இவர்கள் அனைவரும் விரைவில் ரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 25,000/​ ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10,000/​ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

பேருந்து விபத்தில் படுகாயமடைந்து சென்னை அரசு பொதுமருத்துவமனை மற்றும்  ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் பயணிகளை முதல்வர் உத்தரவுபடி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்.சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்தியா,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி அண்ணா தொழிற்சங்கத்தலைவர் சின்னச்சாமி மாமன்ற உறுப்பினர் சிவராஜ் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்வர் ஆணையின்படி அவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்திட டாக்டர்களுக்கு அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago