முக்கிய செய்திகள்

சென்னையில் இன்று ஜெயலலிதா தீவிர பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Actor Mr  K R  Singamuthu (3216 x 2136)

 

சென்னை, ஏப்.1 - சென்னையில் இன்று (ஏப்.1) அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வரும் 13-ந்தேதி தமிழக சட்டபேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல்  பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 24-ந்தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தனது பிரச்சாரத்தை திருச்சியில் துவங்கினார். டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, புதுவை, கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு 8-வது நாளான நேற்று, (மார்ச்.31) வேலூர், காஞ்சி மாவட்டங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

9-ம் நாளான இன்று தென் சென்னை, வடசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை  மேற்கொள்கிறார்.

சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்  மைலாப்பூர் - ராஜலெஷ்சுமி, ஆயிரம் விளக்கு - வளர்மதி, சைதை செந்தமிழன், தி.நகர் - கலைராஜன், அண்ணாநகர் - சைதை துரைசாமி, திரு.வி.க. நகர் - வ.நீலகண்டன், ராயபுரம் - டி.ஜெயக்குமார்,  ஆர்.கே.நகர் - வெற்றிவேல், துறைமுகம் - பழ.கருப்பையா, வேளச்சேரி - எம்.கே.அஷோக் ஆகியோரை ஆதரித்தும், பெரம்பூரில் சிபிஎம் வேட்பாளர் அ.செளந்தர் ராஜனை ஆதரித்தும், எழும்பூரில் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி ஆகியோரை ஆதரித்தும் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஆகியோரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார்.

பிரச்சாரம் செய்யும் இடங்கள் வருமாறு:-

ஆயிரம்விளக்கு தொகுதியில் புஷ்பா நகர், அண்ணாநகர் தொகுதியில் எம்.எம்.டி.ஏ, காலனி மார்க்கெட், வில்லிவாக்கம் தொகுதியில் ரெட்டி தெரு சந்திப்பு,  கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அயன்புரம் பேருந்து நிலையம்,  திரு.வி.க. நகர் தொகுதியில் ஓட்டேரி பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அம்பத்தூர் - வேதாச்சலம், ஆவடி - அப்துல் ரகீம், திருவள்ளூர் - ரமணா, மாதவரம் - மூர்த்தி, பொன்னேரி - ராஜா, திருவொற்றியூர் - குப்பன் மற்றும் மதுரவாயலில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் பீம்ராவ், கும்மிடிப்பூண்டியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பாபு நாயுடு  ஆகியோரை ஆதரித்து  அம்பத்தூர் எஸ்டேட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: