முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசங்கரமேனன் இன்று கொழும்பு செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.29 - இலங்கையின் போக்கு இந்தியாவுக்கு எதிராக கிளம்பி இருப்பதால் அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் இன்று கொழும்பு செல்கிறார். அந்த நாட்டு ராணுவ அமைச்சரையும் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. இலங்கையில் இன பிரச்சினையில் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துகொண்டது. இதை பயன்படுத்தி விடுதலைப்புலிகளுடன் சண்டையிடுவதாக கூறி அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அதோடுமட்டுமல்லாது சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள இலங்கை ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இலங்கை அரசின் காண்ட்ராக்ட் வேலைகளை சீன கம்பெனிகளுக்கே ஒதுக்கிறது. முக்கிய பணிகளில் சீனர்களையே நியமிக்கிறது. பாதுகாப்பு சம்பந்தமாக சீனா மற்றும் பாகிஸ்தானிடம் ஆலோசனை கேட்கிறது. கொழும்பில் கப்பல் கட்டும் பணியை சீனாவுக்கு இலங்கை அரசு கொடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்திய அரசுக்கு அளித்த உறுதிமொழியில் இருந்து இலங்கை அரசு தவறி செல்கிறது. தமிழர்கள் பகுதியில் மறுசீரமைப்பு பகுதிகளை மேற்கொள்வதில் காலதாமதம் செய்து வருகிறது. போரின்போது குவிக்கப்பட்ட சிங்கள ராணுவத்தினர் இன்னும் அந்த பகுதியில் தங்கி அப்பாவி பெண்களை கற்பழித்து வருவதோடு இளைஞர்களை படுகொலை செய்தும் வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் செயல்களால் ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ள இந்திய அரசு அங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரனை இன்று அனுப்புகிறது. இன்று மாலையில் கொழும்பு செல்லும் சிவசங்கர மேனன் அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது தம்பியும் ராணுவ அமைச்சருமான கோத்தபட்சேவையும் சந்தித்து பேசுகிறார். அப்போது இலங்கையின் போக்கிற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிப்பார் என்று தெரிகிறது. தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெறவும் அங்கு மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும் மேனன் கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது. இலங்கையில் சீன ராணுவத்தை ராஜபக்சே குவிக்க முயற்சிகளை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்