முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் யாத்திரை: தமிழகத்திலிருந்து 2863 பேருக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை.ஜூன்.29 - தமிழகத்திலிருந்து இந்தாண்டு 2863 இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் அ.முகம்மது ஜான்  இது குறித்து கூறியதாவது:

மெக்காவிற்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு முதன்முதலாக புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்தாண்டு தமிழகத்திலிருந்து 12 ஆயிரத்து 110 பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் 2683 ப் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து 374 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 43 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அதிக அளவில் விண்ணப்பித்து இருந்த போதும் குறைந்த எண்ணிக்கையில்தான் அனுமதி கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் புனித யாத்திரை பயணம் மேற்கொள்ள தமிழக முதல்வர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் நலத்திற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். உலமாக்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளார். இஸ்லாமிய சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்வர் இருந்து வருகிறார் என்றார் அமைச்சர் அ.முகம்மது ஜான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்