முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெனின்கருப்பன் - ஆர்த்திராவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.29  - நித்யானந்தா தாக்கல் செய்துள்ள வழக்கில் ,லெனின் கருப்பன் ஆர்த்திராவ், சேதுமாதவன் மூவருக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது என்னை பற்றி லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் உள்பட 3 பேர் வெளியில் பேச தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் பற்றி லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் சேதுமாதவன் ஆகிய மூவரும் அவதூறாக பேசி வருகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது அது பற்றி வெளியில் பேசக் கூடாது என்று சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.

எனவே என் மீது நீதிமன்றத்தல் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், சேதுமாதவன் மூவரும் பேச தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்

நித்யானந்தா சார்பில் வக்கீல் பாலாடெய்சி ஆஜரானார். இந்த மனு நீதிபதி சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனு மீது பதில் அளிக்க லெனின் கருப்பன் ஆர்த்திராவ், சேதுமாதவன் மூவருக்கும் நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 5​ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்