முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிக் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 1 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற் றில் ஜோகோவிக் மற்றும் ரோஜர் பெ டரர் ஆகியோரும், மகளிர் பிரிவில் மரி யா ஷரபோவாவும் வெற்றி பெற்று 4- வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். உலக முன்னாள் சாம்பியனான ரோஜர் பெடரர் இந்த 3-வது சுற்றில் மிகவும் தடுமாறினார். முதல் 2 செட்டை இழந் த அவர் பின்பு போராடி வெற்றி பெற்றார். 

இந்த வருடத்தின் 3-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் அருகே நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 3- வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 3 வீரரான ரோஜர் பெடரரும், பிரான்ஸ் வீரர் ஜிலியனும் மோதினர். 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் கடும் போராட்டத்திற் குப் பிறகு 4-6, 6-7, (7), 5-2, 7-6(8), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

6 முறை சாம்பியன் பட்டம் வென்ற பெடரர், 2 முறை தோல்வியின் விளிம்பு க்கு சென்ற பிறகே வெற்றி பெற்றார். அவர் 4-வது சுற்றில் பெல்ஜியம் வீரர் மலிசை சந்திக்கிறார். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக நம் பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக் கும், செக். குடியரசு வீரரும் மோதினர். 

இதில் ஜோகோவிக் சிறப்பாக ஆடி னார். இறுதியில் அவர் 4-6, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் செக். வீரர் ஸ்டீ பானிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 3- வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் உலக நம்பர் - 1 வீராங்கனையான மரியா ஷரபோவாவும், சீன தைபெய் வீராங்கனையும் மோதினர். 

இதில் ரஷ்ய முன்னணி வீராங்கனையு ம், விம்பிள்டன் முன்னாள் சாம்பியனு மான ஷரபோரா அபாரமாக ஆடி, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீன தை பெய் வீராங்கனை கவியை தோற்கடி த்து 4-வது சுற்றுக்குள்  நுழைந்தார். 

மற்ற ஆட்டங்களில், போலந்து வீராங் கனை ரட்வன்ஸ்கா, ஜெர்மனி வீராங்க னை கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்