முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சிவசங்கர மேனன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

 

 

கொழும்பு, ஜூலை, 1 - இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவருடன் அவர் விவாதித்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கொழும்பு நகரில் நேற்று அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். மேலும் பிரதான தமிழர் கட்சியான தமிழ்தேசிய கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தத்துடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த இரு சந்திப்புகளுக்கு பிறகு சிவசங்கர மேனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ராஜபக்சேவுடன் தான் விவாதித்ததாகவும் இந்த விஷயங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தான் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் அவருடன் தான் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகளுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்திய அரசு தயாராக உள்ளது என்று ராஜபக்சேவிடம் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 13 வது சட்ட திருத்தத்தின்படி தமிழர்கள் அதிகமாக வாழக் கூடிய வடகிழக்கு மாகாணங்களில் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்தியாவின் சார்பில் இலங்கை அரசை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்