மன்மோகன் சிங்-ஆ.ராசா சந்திப்பு குறித்த தஸ்தாவேஜூ எதுவும் இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.- 2- பிரதமர் மன்மோகன் சிங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் சந்தித்து பேசியது குறித்த தஸ்தாவேஜூகள் எதுவும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது ரூ.ஒரு லட்சத்தை 80 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2007-2008-ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஆ.ராசா பலமுறை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு எத்தனை தடவை நடந்தது. எப்போதெல்லாம் நடந்தது என்பது குறித்து தகவல் தரும்படி பிரதமர் அலுவலகத்திற்கு தீபக் சலுஜா என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பு குறித்த தஸ்தாவேஜூகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் அது குறித்த தகல்களை சலுஜாவுக்கு அனுப்பும்படி சிறப்பு பாதுகாப்பு பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் பிரதமரும் ராசாவும் சந்தித்த விபரத்தை கொடுக்கும்படியும் கூறியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் சம்பந்தமான தகவல்களை தவிர மற்ற விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிட சிறப்பு பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: