முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கள் வேட்பாளரை அறிவிக்காத அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோருவேன்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை ஜூலை.- 2 - ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காத அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோருவேன் என்று நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி வேட்பாளருக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ.  மற்றும் எம்.பி.க்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு என்பது சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். எனவே இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளையும், மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் தலைவரான கருணாநிதியை சந்திக்க வந்துள்ளேன். தற்போது நடைபெற இருக்கிற ஜனாதிபதி தேர்தல் என்பது பொதுத்தேர்தல் கிடையாது.  அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியை தேர்ந்தொடுக்கின்றனர். மக்களுக்கான பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் உற்பட அமைச்சர்களும் மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் தான் முடிவு செய்ய முடியுமம். எனவே அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதிக்கான வேலைகளை மட்டுமே செய்வேன். எனக்கு இதுவரை சி.பி.எம். பார்வார்டு பிளக் சிவசேனா, ஜே.டி. இ ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் இதுவரை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காத அரசியல் கட்சிகளிடம் நான் ஆதரவு திரட்டுவேன் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். பின்னர் பிரபல ஹோட்டல் ஒன்றில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆதரவு கேட்டார். அங்கு நடைபெற்ற விருந்திலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களை சந்தித்துப் பேசினார். சந்திய மூர்ததி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ராஜீவ்காந்தி வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, இந்திய அரசியலமைப்பு சட்டம் 53-ல் உள்ளது போல் முன்னாள் ஜனாதிபதிகள் ஜாஹிர் உசேன், ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் செயல்பட்டது போல நானும் செயல்படுவேன். நான் வெளியுறவுத்துறை, நிதித்துறை போன்ற பதவிகளில் இருந்த அனுபவம் என்பது எனக்கு உள்ளது. நிர்வாக ரீதியாக செயல்கள், திட்டங்கள் போன்றவை ஜனாதிபதி வரம்பில் கிடையாது. ஜனாதிபதி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உருவத்தை பிரதிபலிப்பதாகும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்