பிரணாப் பேசிய அரங்கில் திடீர் தீ ஐதராபாத்தில் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜூலை. - 2 - ஐதராபாத்தில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட அரங்கில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் நேற்று காலை விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அவருடன் அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோரும் சென்றனர். ஐதராபாத் விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சத்தியநாராயணா ஆகியோர் வரவேற்றனர். பிரணாப் வருகையையொட்டி விமான நிலையத்துக்கு அருகே தெலுங்கானா ஆதரவாளர்கள் திரண்டனர். தெலுங்கானா விஷயத்தில் பிரணாப் முகர்ஜி தனது நிலையை விளக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பிரணாப் முகர்ஜியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் பிரணாப் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசி முடித்து சென்ற 10 நிமிடத்தில் ஹாலில் உள்ள ஒரு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை உடனடியாக அணைத்தனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: