முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரியின் காரை சோதனை செய்யாமல் அனுமதிப்பதா?

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஏப் 1 - ராமநாதபுரத்துக்கு வந்த மு.க. அழகிரியின் காரை சோதனை சாவடியில் எந்தவித சோதனையும் செய்யாமல் அதிகாரிகள் அனுமதித்ததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் நகரின் நுழைவாயிலில் எம்.ஜி. மஹால் அருகில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நகருக்குள் வரும் எல்லா வாகனங்களையும் சோதனை சாவடியில் சோதனை நடத்திய பின்னரே அதிகாரிகளால் அனுமதிக்கப்படுகிறது. 

ஆனால் நேற்று மு.க. அழகிரி ராமநாதபுரத்திற்கு 3 வாகனங்களில் வந்தார். ராமநாதபுரம் சோதனை சாவடி அருகில் வந்த போது அவரது கார் நின்றது. ஆனால் அதிகாரிகளோ, போலீசாரோ எந்தவித சோதனையும் செய்யாமல் நகரின் உள்ளே அனுமதித்து விட்டனர்.

தென் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் அழகிரி சென்று பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது வாகனத்தை சோதனை செய்யாமல் அனுமதித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்து சி.பி.எம் தாலுகா குழு உறுப்பினர்கள் கலையரசன் கூறுகையில், மாவட்டத்துக்குள் நுழையும் எல்லா வாகனங்களையும் சோதனை செய்யும் அதிகாரிகள் அழகிரியின் வாகனத்தை சோதனை செய்யாதது ஏன்? அவருக்கு விதிவிலக்கு ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா. இது போன்று பாரபட்சமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்