நக்சலைட்டுகள் 36 பேர் ஆந்திராவில் கைது

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை. - 3 - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும், மாநில போலீசாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 36 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். 

நக்சல் கமாண்டர் லம்பய்யா, பெண் நக்சலைட் பாங்கினை, நக்சலைட்டுகள் வெங்கட்ராவ், பாபுராவ் உள்ளிட்ட 36 பேர் பிடிபட்டனர். இதில் லம்பய்யாவை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறவிக்கப்பட்டிருந்தது. நக்சல்களை கைது செய்த இடத்தில் இருந்து 4 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், குண்டு துளைக்காத சட்டைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்: