முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தஜிகிஸ்தான் பயணமானார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 3 - இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தஜிகிஸ்தான் நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார்.  இந்த பயணத்தின் போது வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யா சென்றார். அப்போது தஜிகிஸ்தான் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி விட்டு வந்த நிலையில் கிருஷ்ணா செல்வது குறிப்பிடத்தக்கது.  இந்தியா தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவு 1990 ம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தஜிகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்ததால் தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago