முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் வெள்ளப்பகுதிகளை மன்மோகன், சோனியா பார்வையிட்டனர்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கெளகாத்தி, ஜுலை - 3 - அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விமானம் மூலம் பார்வையிட்டனர்.  அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. கடுமையான வெள்ளத்தின் காரணமாக இதுவரை இம்மாநிலத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 பேர் நிலச்சரிவில் உயிரோடு புதைந்து பலியாகியுள்ளனர். வெள்ளச்சேதம் கடுமையாக இருப்பதால் அம்மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியாகாந்தி ஆகியோர் நேற்று டெல்லியில் இருந்து  தனி விமானம் மூலம் அசாமில் உள்ள ரோஹ்மோரியா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தை சென்றடைந்தனர். விமான நிலையத்தில் இவர்களை அசாம் முதல்வர் தருண் கோகோய், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். பிறகு இவர்கள் இருவரும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு அசாம் பகுதிகளை பார்வையிட்டனர். இவர்களுடன் அசாம் முதல்வர் தருண் கோகோய், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அஜந்தா நியோக், மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் ஹெலிகாப்டர்களில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். 

வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அசாம் தலைநகர் கெளகாத்திக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். அங்கு சிறிது நேரம் தங்கி மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் வெள்ள நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு நேற்று மாலை கெளகாத்தியில் இருந்து மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தனி விமானம் மூலம் புதுடெல்லி புறப்பட்டுச் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago