முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதி மீறல் - நடிகர் பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

கமுதி,ஏப்.1 - கமுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக நடிகர் பாக்யராஜ் மற்றும் வேட்பாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நடிகர் பாக்யராஜ் கமுதிக்கு வந்திருந்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக 11 கார்களில் தி.மு.க. பிரமுகர்கள் சென்றார்களாம். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் கமுதி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். அதன் பேரில் நடிகர் பாக்யராஜ், வேட்பாளர் சத்யமூர்த்தி, கே. முருகவேல் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. காதர்பாட்சா, ஊராட்சி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் எம்.எம். அம்பலம், தீபம் தொண்டு நிறுவன இயக்குனர் செல்வமேரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago