முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் ஜெயலலிதா பிரச்சாரம் - ஹெலிகாப்டர் தளம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,ஏப்-1 - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வருகின்ற 4 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.இதையொட்டி அவர் தரையிறங்க இருக்கும் ஹெலிகாப்டர் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.மக்களை அமோக ஆதரவுடன் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் அவர் வருகின்ற 4-ஆம் தேதி ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து ஆண்டிபட்டியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.இதற்காக அவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆண்டிபட்டியில் தரை இறங்குகிறார்.இந்த ஹெலிகாப்டர் தளத்தை காவல்துறை அதிகாரிகளும் பொதுப்பணித்துறையினரும் கட்சியினரும் ஆய்வு செய்தனர்.அப்போது ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர்  தங்கதமிழ்செல்வன் ,காவல்துறை ஆய்வாளர் கண்ணன் ,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்