முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை சாட்சி வராததால் தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 4 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சாட்சியான அசீலா கோயங்கா நீதிமன்றத்துக்கு வராததை தொடர்ந்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கோடை கால விடுமுறைக்கு பின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் சி.பி.ஐ. தரப்பு சாட்சியான ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் வினோத் கோயங்காவின் மனைவி அசீலா சாட்சியமளிக்கவிருந்தார். ஆனால் அசீலாவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை அசீலாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் சாட்சியமளிக்கும் தேதி  தள்ளி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேவ்கான் பழங்கள் மற்றும் காய்கறி நிறுவன இயக்குனர் ஆசிப் பல்வா, சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, யுனிடெக் நிறுவன மேலாண்மை இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோர் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக மருத்துவ வியாபார காரணங்களுக்காக கடந்த ஜூன் 8 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு சென்றவர நீதிமன்ற அனுமதியை இவர்கள் பெற்றிருந்தனர். விசாரணை மீண்டும் தொடங்கியதை அடுத்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுல்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்