முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. - 4 - நக்சலைட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என்று சத்தீஸ்கார் முதல்வர் ராமன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கார் முதல்வர் ராமன் சிங் நேற்று முன்தினம்  டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி தேர்தல் குறித்த பா.ஜ.க. முதல்வர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பிறகு அவர் நேற்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது மாநில வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்தார். அதன் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய ராமன் சிங், நக்சலைட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அரசியல்  ஆக்க வேண்டும் என்று  அவர் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சத்தீஸ்கார் மாநிலத்தில்  மாவோயிஸ்டு நக்சலைட்டு  தீவிரவாதிகளின் அட்டகாசம்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மாரோயிஸ்டுகள்  கடத்தி சென்றனர். நீண்ட இடை வெளிக்கு பிறகு  பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் பீஜப்பூர் மாவட்டத்தில்  நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 மாவோயிஸ்டு  தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு  பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்திருந்தன. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்  பீஜப்பூர் என்கவுன்ட்டர் திட்டமிட்டு  நடத்தப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும் இதை  அரசியல் கட்சிகள் அரசியலாக்க கூடாது எந்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரவ்காத் சுரங்க கம்பெனியை திருப்தி படுத்தும் வகையில்தான்  பீஜப்பூர்  என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு ராமன் சிங் மேற்கன்ட பதிலை தெரிவித்தார். பின் தங்கிய  பகுதிளின் முன்னேற்றத்திற்காக சத்தீஸ்கார் அரசு செயல்பட்டு வருகிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது தேவையில்லாதது என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்