முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜிக்கு உ.பி. முதல்வர்அகிலேஷ்யாதவ் விருந்து அளித்தார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ. ஜூலை. - 4 - ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று பகல் விருந்து அளித்து கவுரவித்தார். வருகிற 19 ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இவருக்கு  உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளிக்கிறது.  இதை தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று பகல் விருந்து அளித்து கவுரவித்தார். நேற்று லக்னோ வந்து சேர்ந்த பிரணாப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து நேராக   காளிதாஸ் மார்க் வீதியில் உள்ள 5 ம் எண்ணில் உள்ள அகிலேஷ்யாதவின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை முதல்வர் அகிலேஷ் யாதவ் வரவேற்றார். அங்கு சமாஜ்வாடி கட்சியை  சேர்ந்த மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திரளாக கூடியிருந்தனர். அவர்களும் பிரணாப் முகர்ஜியை வரவேற்றனர். இந்த விருந்தில்  காங்கிரஸ் கட்சி  உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும்  குழுமியிருந்தனர்.  மாயாவதியின் சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.க. கட்சிகளை சேரந்த எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இந்த விருந்துக்கு வரவில்லை. மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள்  ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்,  ராஜீவ் சுக்ளா,  உ.பி. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா  ஜோஷி, உ.பி. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்   பிரமோத் திவாரி ஆகியோரும் இந்த பிரமாண்ட விருந்தில் பங்கேற்றனர். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டி வரும் பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் உ..பி. சென்றுள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் உ.பி.  முதல்வர் அகிலேஷ்யாதவ் இந்த பிரமாணட் பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நேற்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து  தனக்கு ஆதரவு திரட்டிய பிரணாப் முகர்ஜி நேற்று இரவு உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அளித்த இரவு விருந்திலும் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்