முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 4 - முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை தனது அமைச்சரவையில் சேர்க்க விரும்பியிருக்கிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 1998 ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த போது அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பியுள்ளார் வாஜ்பாய். அதாவது 2002ல் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆனதற்கு 4 வருடங்களுக்கு முன்பே வாஜ்பாய் இவ்வாறு விரும்பி இருக்கிறார். ஆனால் அவரது விருப்பத்தை ஏற்க கலாம் மறுத்துவிட்டார். இந்த புதிய தகவல் அப்துல் கலாமின் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நள்ளிரவில் வாய்பாயிடமிருந்து கலாமிற்கு தொலைபேசி அழைப்பு போய் இருக்கிறது. அப்போது பேசிய வாஜ்பாய் தான் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்து கொண்டிருப்பதாகவும் அதில் கலாமை சேர்க்க விரும்புவதாகவும் கலாமிடம் கூறியிருக்கிறார். ஆனால் அப்துல் கலாமோ தனக்கு சிந்திக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டாராம். இருந்தாலும் வாஜ்பாய் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் அப்துல் கலாம் இரவு முழுவதும் தனது நண்பர்களுடன் அமைச்சரவையில் சேருவதா அல்லது மேண்டாமா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தியிருக்கிறார்.  இறுதியில் தனக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில பணிகள் இருந்ததால் அமைச்சர் பதவியை நிராகரித்திருக்கிறார் அப்துல் கலாம். இந்த தகவல் அவரது புதிய நூலில் வெளியிடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago