முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலை தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது ஈரான்

புதன்கிழமை, 4 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

டெஹ்ரான். ஜூலை.- 4 - இஸ்ரேல் நாட்டை தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை ஒன்றை தயாரித்துள்ள ஈரான் அதை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. வளை குடா பகுதியில் உள்ள ஈரான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. பாலஸ்தீனத்தின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் நாட்டை தாக்கும் வல்லமை கொண்ட ஒரு நவீன ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது. இஸ்ரேல் தாக்கினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பாலை வனப்பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த தகவல்கள் மேலுஏம் கூறுகின்றன. ஷகாப் - 3 என்ற இந்த  ஏவுகணை நடுத்தர தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இது அணு  ஆயுதங்களை தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.  கவீர் பாலை வனப்பகுதியில் ஒரு போலி இலக்கை வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி பெற்றதாக ஈரான் அதிகாரிகள் கூறியதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஈரானிலிருந்து இஸ்ரேல் 1000 கி.மீ. தொலைவில்  இருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை 200 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என்றும் அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே ஈரான் சோதித்துள்ள ஷகாப் 2 ஏவுகணை  300 முதல் 500 கி.மீ.தூரம் வரை பறந்து சென்றும் தாக்கும் திறன் கொண்டது. ஈரான் நடத்திய இந்த ஏவுகணை சோதனை இஸ்ரேல் நாட்டிற்கு அவ்வளவு அதிரச்சியை தராது ஏனென்றால் இஸ்ரேல் நாடு தன் வசம் இதை விட அதி நவீன ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்